இந்திய விண்வெளி வீரர் சுபான்ஸு சுக்லா சர்வதேச விண்வெளி பயணத்திற்கு தயாராகி இருந்த நிலையிலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் இதுவரை ஏழு முறை விண்வெளி பயணத்திற்கு செல்ல தடை ஏற்பட்டு இருந்தது. ஏழு முறை தடை ஏற்பட்டாலும் இன்று பால்கன் 9 ராக்கெட்டின் மூலம் இன்று காலை 12 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல தயாராகி உள்ளனர். இந்த பயணத் திட்டத்தை அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த வருடம் சுனிதா வில்லியம்ஸ் என்ற பயணமானது எதிர்பாராத வகையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலேயே சில மாதங்கள் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் இந்த பயணம் கூடுதல் பாதுகாப்பு சிறப்பு அம்சங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதன் தொழில்நுட்ப கோளாறு சிறு தொய்வு காரணமாகவே ஏழு முறை விண்வெளி பயணம் தடை செய்யப்பட்டு இன்று மீண்டும் புறப்பட தயாராக உள்ளது. இவருடன் இணைந்து அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த நால்வர் கொண்ட குழு தயாராக உள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடேவில் உள்ள நாசா கென்னடி விண்வெளி மையத்தில் பால்கன் 9 ராக்கெட் தயாராகி ரெடியாக உள்ளது. இன்று கிளம்பும் இந்த குழு இருபத்தி எட்டு மணிநேர பயணத்திற்குப் பிறகு நாளை மாலை நாலரை மணிக்கு சர்வதேச விண்வெளி மையம் அடையும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர் சுக்லா இன்று வெளியிட்டுள்ள பதிவில், இந்திய மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இது ஒரு மைல் கல் பயணம். எனவே அனைவரும் இந்த பயணம் நல்லபடியாக செயல்பட வேண்டும் என்று பிராத்திப்போம் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.