Cricket : தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையின் காரணமாக தடைபட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முக்கிய போட்டியான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், இந்தப் போட்டியின் நடைபெற இருந்த ராவல்பிண்டி மைதானத்தில் தொடர் மலையின் காரணமாக போட்டி தாமதமாகிக் கொண்டே இருந்தது. அதன்பின் மழை நின்ற பின் ஓவர்களை குறைத்து போட்டி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் நீண்ட நேரம் மழை நிற்காத காரணத்தினால், மேலும் ராவல்பிண்டி மைதானத்தில் மழை நீர் வெளியேற்ற போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும் 20 ஓவராக குறைத்து 7 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை நிற்காத காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்டது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து அணி உடனும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணியுடனும் மோதும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தோல்வியை தழுவினால் மற்ற அணிகளின் தோல்வியை பொருத்தே அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகும். நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.