கார் டிரைவிங் கத்துக்கணுமா? இலவச முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது தெரியுமா!!

அரசு சார்பில் அவ்வப்போது இலவச பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில பெரிய நிறுவனங்களும் அதை ஸ்பான்சர் செய்து வேலைகளுக்கு ஆட்கள் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் தையல் பயிற்சி, ஆட்டோ மெக்கானிக் பயிற்சிகள், வீட்டுப் பொருட்களை சரி செய்யும் பயிற்சிகள் ஆகியவை மக்களின் தொழில் முன்னேற்றம் அமையும் வகையில் கொடுக்கப்பட்டு வந்தன.

அந்த வகையில் தற்போது கார் டிரைவிங் என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. அதன் காரணமாக தற்சமயம் இலவசமாக கார் டிரைவிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இது தொடர்பாக பல முயற்சிகள் எடுத்து வந்தன. இந்நிலையில் இந்நிறுவனம் கார் ஓட்டுநர் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பிரத்யேக உபகரணங்களும், தேவைப்படும் உணவுகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தகுதியாக எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் எனவும், வயதுவரம்பு 19 முதல் 45 க்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கென்று இருபாலரும் பங்கு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய உரிமம் வாங்க உதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு டிரைவிங் பயிற்சி செயல்படுத்தினால் எல்லோரும் பயன் அடைவார்கள் என்று நெட்டிஷன்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram