மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அதிபர்!! இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு காரணம் நான்தான்!! 

Trump who stirred controversy again
ஆம்ஸ்டர்டாம்: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறி வருவது சர்ச்சையை கிளப்பி வருகிறது. நேட்டோ  மாநாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மூலம் மிரட்டியதால் போர் முடிவுக்கு வந்தது என கூறி இருந்தார்.
தற்போது மீண்டும் இரு நாடுகளையும் விரட்டியதால் தான் பயங்கரவாத தாக்குதல் அமைதி நிலைக்கு திரும்பியது என பேசி உள்ளது தற்போது பூகம்பத்தை கூட இப்படி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் தாக்கியது பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளவாடங்கள் பயங்கரவாத முகாம்கள் என குறிவைத்து தாக்கியது.
சில நாட்களுக்கு மட்டும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என பேசி வருகிறார். தற்போது மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வர்த்தக ஒப்பந்தத்தை வைத்து இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை நிறுத்தினேன் என்று கூறியுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடத்தப்பட்ட நாட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் உடனான மோதலை தீர்த்து வைத்தது அவர்தான் என்பது போல் கூறினார். மேலும், நான் பல மோதல்களை தீர்த்து வைத்திருக்கிறேன். அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உடனான மோதல் முக்கியமானது என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram