Political: அன்புமணி மற்றும் ராமதாஸ் தந்தை மகன் இடையே சமீப காலங்களாக உட்கட்சி விவகாரம் பிரச்சனை நடைபெற்று வரும் நிலையில் இருவரும் கட்சியின் தலைவர் என கூறிக் கொண்டு வந்த நிலையில் இன்று மீண்டும் ராமதாஸ் நான் தான் கட்சித் தலைவர் என மீண்டும் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் இளைஞரணி தலைவராக தனது பேரன் முகுந்தனை அறிவித்த போது அன்புமணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேடையில் நடந்து கொண்டது. பேச்சு மோதலாக தொடங்கி இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு இன்று வரை அது முரண்பாடாகவே தொடர்கிறது.
இந்நிலையில் இரு கூட்டமைப்புகளாகப் பிரிந்து ஒருவர் பொதுக்குழு கூட்டம் நடத்தினால் மற்றொருவர் நிராகரிப்பது என்னும் வகையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நீடித்துவரின் நிலையில் நேற்று சேலம் எம்எல்ஏ அருளுக்கு ராமதாஸ் இணை பொதுச் செயலாளர் பதவி அளித்தார். நேற்று இரவே அன்புமணி அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தார்.
இருவரும் இவ்வாறு மாறி மாறி எதிர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று சென்னையில் செய்திகளை சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர் என திட்டவட்டமாக கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அன்புமணி என்ன கூற உள்ளார் என்பதை தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.