மனைவியின் டார்ச்சர் தாங்காமல் இளைஞரின்  விபரீதம்!! வாழ்வதற்கு சாவதே மேல் முடிவு!!

Death is the best way to live!!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிவப்புரி பகுதியில் உள்ள மஹால் சராய் புரணி என்ற இடத்தை சேர்ந்தவர் ஷாகீர் கான் பர்சானா தம்பதிகள். திருமணமான தொடக்கத்தில் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.
அதன் பின்னர் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. ஷாஹிர்கானை மனைவி மிரட்ட தொடங்கி வரதட்சணை புகார் செய்து சிறையில் அடைத்து விடுவேன் என்று மனைவி மற்றும் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாகிர்கான் வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதற்கு முன்னால் இரண்டு முறை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
போலியாக வரதட்சணை புகார் செய்வதாக தொடர்ந்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து மிரட்டி உள்ளனர். விரக்தி அடைந்த ஷாகிர்கான் மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கு ஆபத்து உள்ளது எனவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் பொது மக்கள் குறை கேட்டு அதிகாரிகளிடம் கூறியுள்ளார் ஷாகீர் கான்.
மேலும்,கூறுகையில் எனது வீட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. மனைவியின் மிரட்டல் குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது போலியான வரதட்சணை புகாருக்கு அளித்து விடுவேன் என்று மனைவி மிரட்டுகிறார். என்னை காப்பாற்ற வேண்டும். வாழ்வதற்கு சாவதே மேல் என தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் காப்பாற்றி விட்டனர். மேலும் என்னை கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் ஷாகீர்கான்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram