Cricket: இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியை டாபர்மேன் நாய் உடன் ஒப்பிட்டு பேசியது தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணியின் முதல் வேட்டியை தவிர ஏழாவது பேட்டிங்கிற்கு மேல் விளையாடும் வீரர்கள் அணிக்கு ரன் சேர்ப்பதே இல்லை. இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நான்கு பேட்ஸ்மேன்கள் இணைந்து ஐந்து ரன்கள் மட்டுமே அணிக்கு சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் ஐந்து சதங்கள் அடித்த போதிலும் வெற்றி பெற முடியவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியனின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியை டாபர்மேன் நாய் உடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் டாபர்மேன் நாய்க்கு வால் இருக்காது தலை மிக நன்றாக இருக்கும் உடல் ஏதோ இருக்கும் ஆனால் வால் இருக்காது.
அதுபோலத்தான் இந்திய அணி முதல் பேட்டிங் நன்றாக இருக்கும் நடுவில் இருக்கும் ஆனால் வால் இருக்காது. இந்திய அணியின் கடைசி நான்கு ஐந்து வீரர்கள் அணிக்கு ரன் சேர்ப்பதேயில்லை உம்ரா இதுவரை 22 டக்அவுட் ஆகியுள்ளார் சிராஜ் 12 டக் அவுட் ஆகி உள்ளார். அணியில் ஜடேஜா மற்றும் தாக்கூர் இருவரையும் நீக்கிவிட்டு நித்திஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்த்து விளையாடலாம் என அறிவுரை கூறியுள்ளார்.