கிரிக்கெட் : இங்கிலாந்து அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி முடித்த நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி விளையாடி முடித்த நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மெண்ட்கள் சிறப்பாக விளையாடி சதம் விலாசி ரன்கள் சேர்த்த போதிலும் பந்துவீச்சில் மோசமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி தோல்வியடைந்தது இந்திய அணி.
இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் முதல் இன்னிங்க்சில் 42 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 137 ரர்களும் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் அவர் சாய் சுதர்சனிடம் தமிழ் மொழியிலும், ரிஷப் பண்ட்டுடன் இந்தி மொழியிலும், கருண் நாயருடன் கன்னட மொழியிலும், பேசி விளையாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை குறிப்பிட்டு தமிழக மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் எல்லா விதத்திலும் ஒரு சிறந்த வீரராக கே எல் ராகுலை நான் பார்க்கிறேன். இதுபோன்று அனைத்து வீரர்களும் அவர்களுக்கு ஏற்ற மொழியில் பேசும் திறன் வாய்ந்தவர். அதுமட்டுமில்லாமல் எந்த இடத்திலும் எந்த பார்மெட்டிலும் களமிறங்கி விளையாடும் அசாத்திய வீரர் கே எல் ராகுல் என அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.