கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது இதில் ரிஷப் பெண் செய்த ஒரு செயலை அஸ்வின் எச்சரித்துள்ளார்.
இந்த மாதம் 20 ம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளின் விளையாட உள்ள நிலையில் முதல் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் 5 வீரர்கள் சதம் அடித்த போதிலும் வெற்றி பெற முடியவில்லை என இந்திய ரசிகர்கள் வருத்தம்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்ஸிலும் சதாம் பிளாசி அபார சாதனைகளை படைத்தார். அவர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த பிறகு பல்டி அடித்து அதனை கொண்டாடும் விதமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அது அப்போது இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிசிலும் அவர் சதம் அடித்தபோது சுனில் கவாஸ்கர் பல்ட்டி அடிக்க கூறினார் ஆனால் அதை செய்யவில்லை.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை கூறுகையில் அது போன்று நீங்கள் பல்டி அடிக்க வேண்டாம் அது உங்கள் உடல் சோர்வை ஏற்படுத்தும் உடலில் பிரச்சனைகளை உண்டாக்கும். அவர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் நீங்கள் முக்கியமான இடத்தில் பேட்டிங் செய்கிறீர்கள் உங்களுக்கு பின் களமிறங்கும் வீரர்கள் தற்போது சரியான ஃபார்மில் இல்லை அதனால் நீங்கள் அதுபோன்று செயல் செய்து உங்கள் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.