மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டு புதிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளுக்கு இரண்டு முறை வாய்ப்பு அளித்துள்ளது. அதாவது ஒரு மாணவர் பப்ளிக் தேர்வை இரண்டு முறை ஒரு வருடத்திற்கு எழுதிக் கொள்ளலாம். இந்த வருடம் பொது தேர்வானது சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு இரண்டு முறை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சன்யாம் பரத்வாஜ் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை இன்று தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு ஆனது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிற்கு மட்டும் இரண்டு முறை தேர்வு நடத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக நடக்கும் தேர்வுகள் பிப்ரவரியிலும், அதன் முடிவுகள் ஏப்ரலிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மார்க் குறைந்த மாணவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு எடுத்து மார்க்கை அதிகப்படுத்துவதற்கு மே மாதம் மற்றொரு தேர்வும், அதன் முடிவுகள் ஜூனிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாணவர்கள் ஏதேனும் மூன்று பாடத்தில் மார்க்கை அதிகப்படுத்திக் கொள்ள இரண்டாவது பரிட்சையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை தான் உள் மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.