Dindugal: 2001 ஆம் ஆண்டு திண்டுக்கல் செம்பட்டியில் ஒருவர் வீட்டில் நகை திருட்டு போனது. இதனை செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் சின்ன தேவர் மற்றும் வீரத்தேவர் இந்த காவல் அதிகாரிகளும் திருட்டு போனவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று மாலை வரை விசாரித்து மானபங்கம் செய்துள்ளனர்.
அன்று அவரிடம் எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். அந்தப் பெண் அன்று இரவுவே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டுள்ளனர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் . இதில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆர்டிஓ இடம் புகார் அளித்தார். இதனை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிமன்றம் 40 சாட்சியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் தண்டனையை நீதிபதி தீபா தீர்ப்பளித்தார். மேலும் 36 ஆயிரம் அபராத தொகையை நிரபராதியான அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தாமதமாக கிடைத்தாலும் இந்த தீர்ப்பு அந்த பெண்ணிற்கு அநீதி தான் என்று செய்தி வட்டாரங்கள் கூறி வருகிறது.