சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தமிழ் அறிஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு சலுகையாக விலை இல்லா பயண அட்டை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மென்பொருள் தயாரிப்பு காரணமாக இதற்கு முன்னாடி வைத்திருக்கும் இலவச பயண அட்டைகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வைத்து பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்துகள் முக்கியமானதாக இயங்குகின்றன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன.
குறிப்பாக மலைப்பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழறிஞர்களின் இலவச பேருந்து பயண அட்டை கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் காலாவதியாயவனை நிலையில் ஜூன் 30 வரை பயண அட்டைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் பயன்பாட்டுக்கு வராத நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பயண அட்டைகளை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளார் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் முதிர்ந்த தமிழறிஞர்கள் ஆகியோர்களுக்கு கட்டணம் இல்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக ஏழு ஒன்பது 2023 முதல் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வழியாக பெரும் வசதியினை நடைமுறைப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் பயணமில்லா கட்டண அட்டைகள் காலாவதியான நிலையில் 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.