நெல்லை: நெல்லை மாவட்டத்தின் மேலப்பாளையம் அருகே உள்ள ஊரை சேர்ந்த மாரியப்பன் மற்றும் சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அவரது மகன்.
மகன் ஊதாரித்தனமாக படிக்க செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. பிள்ளைகளை நன்றாக படிக்க வேண்டும் என பெற்றோர்கள் அறிவுறுத்துவது வழக்கம் தான். ஆனால் இங்கு மாரியப்பன் தன் மகனிடம் ஒழுங்கா படி என அடிக்கடி சொல்லி இருக்கிறார். நேற்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய மாரியப்பன் அவரது மகனிடம் ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பார்க்க வேண்டுமே தவிர மற்றவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்த வேண்டும் என்று கட்டன் ரைட்டாக கூறினார்.
இதில் தந்தை மற்றும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முடிந்து குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பின் தூங்க சென்று விட்டனர். மாரியப்பன் வீட்டிற்கு வெளியே தூங்குவது வழக்கம். அதேபோல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த இருக்கிறார். ஆடுகளை கட்டி வைத்திருந்த பெரிய கல்லை எடுத்து வந்து எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் தலையில் போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார் மகன்.
பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மாரியப்பன் அலறல் கேட்டு குடும்பத்தினர் வருவதற்குள் மகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மேலப்பாளையம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.