கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பெண் செய்த செயல்களை நான் மிகவும் ரசிக்கிறேன் என இங்கிலாந்து முன்னால் வீரர் ஸ்டுவர்ட் பிராட் ரிஷப் பண்ட் க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது அதில் முதல் போட்டி நடைபெற்ற முடிந்த நிலையில் இந்திய அணி முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி.
முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட். முதல் இன்னிங்ஸில் சதமிலா செய்ய பின் பல்டி அடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். அது மட்டும் இல்லாமல் சிக்ஸர் அடிப்பது கீழே விழுந்து பவுண்டரி அடிப்பது என அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிஷப் பண்ட்.
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் ரிஷப் பண்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரிஷபண்டின் ஆட்டத்தை விட சிறந்த ஜாலியான ஆட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் செய்வதெல்லாம் உங்களை தானாக கவர்ந்து இழுக்கும். சிலர் களத்திற்கு வருகிறார் என்று தெரிந்தாலே நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுவோமே அதுபோன்று வீரர்களில் ஒருவர்தான் இவரும் என புகழ்ந்து கூறியுள்ளார் ஸ்டுவர்ட் பிராட்.