சென்னை: வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் பிரமோஷன் வெளியானது. மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தை தயாரித்திருக்கிறார். அம்மாவுடன் சேர்ந்து பெட்டியில் கலந்து கொண்டார் ஜோவிகா. தேவயானியின் மகள் இனியா மற்றும் ஜோவிகா ஆகிய இருவரையும் ஒப்பிட்டு சிலர் பேசுவது குறித்து தனது ஆதங்கத்தை கொட்டினார் வனிதா.
விஜயகுமார் குடும்ப பிரச்சனைக்கு பிறகு பிக் பாஸ், குக் வித் கோமாளி மற்றும் சீரியல்கள் மூலமாக பிரபலமாகிவிட்டார். சமீபத்தில் தேவயானி பற்றி வந்த செய்திகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார் வனிதா. தேவயானி நின்று கொண்டிருக்கும் போது வனிதா திமிராக அமர்ந்திருந்தது சர்ச்சையை கிளப்பியதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது, தேவயானியும் நானும் ஒன்றாக தான் அறிமுகமானோம் சினிமாவில். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நீ வா போ என்ற அளவிற்கு எங்களுடைய பழக்கம் இருக்கிறது. தேவயானி உட்கார சொன்னேன். அவங்க தான் இல்ல இந்த படத்துல நீ தான் முக்கியம். அதனால நீ உட்காரு நான் நிற்கிறேன் என்று சொன்னாங்க. நான் அப்பவே சொன்னேன் நீங்க நிக்கும் போது நான் உட்கார்ந்து இருக்கிறது யாராவது திட்ட போறாங்க என்று சொன்னேன்.
கடைசியில் அதேபோல் என்னை திட்டி தீத்துட்டாங்க.
தேவயானியின் மகளோடு என் மகள் ஜோவிகாவை கம்பேர் பண்றாங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். இதை வைத்து நடிகை தேவயானியின் மகளுடன் என் மகளை ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று வனிதா விஜயகுமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.