போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் தொடர்ந்து கிருஷ்ணா கைது!! விசாரணை முடிவு!!

சமீபமாக சட்ட விரோத போதை பொருள் உபயோகித்ததாக ஸ்ரீகாந்த் ரத்த பரிசோதனை முடிவில் கைது செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அதை சப்ளை செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் பல திடுக்கிடும் உண்மைகளை விசாரணை மூலமாக தெரிவித்து இருந்தார். மேலும் அவரது மொபைல் போனில் பல மோசடி கும்பல்களின் காண்டாக்ட்கள் இருப்பதால் அவரை தீவிர விசாரணையில் ஈடுபடுத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி உள்ள ஸ்ரீகாந்த் விசாரணையின் போது தன் சூழல் காரணமாக இவ்வாறு தவறு செய்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டிருந்தார். மேலும், விசாரணையின் போது பெற்ற தகவலின் அடிப்படையில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சிக்கிக் கொண்டு இருந்தார். இரண்டு நாட்களாக அவரை போதைப்பொருள் வழக்கில் விசாரிக்க இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போதை பொருள் சப்ளையர் கெவின் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரையும் தீவிர விசாரணைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூருவில் சப்ளையர் கெவினை தேடி போலீசார் கடந்த வாரம் பிரச்சனை ஆரம்பித்தது முதலே தேடி வந்திருந்தனர். இந்நிலையில் அவரும் போலீசாரின் பிடியில் சிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரை வைத்து இதற்கு மேல் யார் யார் இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. பல பிரபலமானவர்கள் இதில் கைது ஆகலாம் என்று போலீசாரால் யூகிக்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram