TVK: தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா சென்னை பூஞ்சேரியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கு முன்பாக விக்கிரவாண்டில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி முடித்தார்.
பின்பு படிப்படியாக மாநிலம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மூன்று மாதங்களில் இருக்கும் நிலையில் தேர்தல் யூகம் அமைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று சென்னை ஏர்போர்ட்கு திடீரென வந்த பிரசாந்த் கிஷோர் நாளை நடக்க உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள தான் சென்னை வந்துள்ளார் என்று பேசப்படுகிறது.
மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் வியூக அமைப்பாளராக திமுக நியமித்தது. இதனை அடுத்து அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. அதனால் விஜய் பிரசாந்த் கிஷோரை இதற்கு முன்னரே சந்தித்து பேசி இருந்தார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனால் நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர்களிடம் 20 நிமிடம் பேச போகிறவர் என்று கூறப்படுகிறது. தேர்தலில் வாக்கு வங்கி மற்றும் பூத் கமிட்டி பற்றி அதன் முக்கியத்துவத்தை பற்றியும் மேலும் பல முக்கியமான தகவல்களை விஜய் உடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளார். இதற்கு முன்பு திமுகவின் வீயூக இருந்த காரணத்தினால் கள நிலவரம் பற்றி நன்கு அறிந்திருப்பார். இந்த நாள் திமுகவினர் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு உள்ளனர். இன்று மாலை சென்னை வந்தவர் காரில் ஏறி ஓட்டலுக்கு சென்றார். இவர் வருகைக்கு விஜயும் தமிழக வெற்றிக்கனமும் காரணம் என்று பேசுகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் அதிவேக வளர்ச்சியை மற்ற அரசியல் கட்சிகள் உற்றுநோக்கி கொண்டிருக்கின்றனர்.