மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளி!! வேட்பாளரை இழிவுபடுத்தும் அதிபர் டிரம்ப்!!

Indian descent in mayoral election!!
நியூ யார்க்: நியூயார்க்கில் வரும் நவம்பர் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்படி மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோரான் மம்தானி வேட்பாளராக தேர்வாகியுள்ளார். நவம்பர் நான்காம் தேதி நடைபெறும் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த கர்டிஸ் ஸ்லியா அதை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். வேட்பாளர்களை அறிவித்த சில மணி நேரங்களிலேயே  அவரை சமூக வலைதளங்களில் தாக்கி பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
காங்கிரஸ் வுமன் அலெக்சாண்டரியா ஒகாசியோ கோர்டஸ் மற்றும் செனட்டர் ஷுமர் ஆகியோரை விமர்சித்து பேசியுள்ளார் ட்ரம்ப். “ஜோரான் கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்” என விமர்சித்து பேசியுள்ளார். ஜனநாயக கட்சியினர் எல்லை மீறி விட்டதாகவும், ஜோரான் மம்தானி “100% கம்யூனிஸ்ட் பைத்தியம்” என்றும், டெம்ப் பிரைமரியை வென்று மேயராவதற்காக வருகிறாரா என விமர்சித்து பேசியுள்ளார்.
மேலும், பேசிய அவர் அவரது குரல் எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது எனவும், புத்திசாலியான நபர் இல்லை எனவும்,பார்க்கவே பயங்கரமாக இருக்கிறார் என்றும், நான்கு காங்கிரஸ் பெண்மணிகள் ஆதரவு மட்டும் தான் இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். முற்போக்கு அரசியல்வாதிகள் அனைவரையும் இழிவுபடுத்தி கூறுகிறார் அதிபர்.
குயின்ஸின் அஸ்டோரியா தொகுதியில் பிரதிநிதியாக நியூயார்க் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் மம்தானி. பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக மம்தானி அறிவித்துள்ளார். அதன்படி இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகூ நியூ யாருக்கு இருக்கு வந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்ட பிடிவாரண்டை வைத்து கைது செய்வேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram