மாதந்தோறும் வரும் சிவராத்திரியை தாண்டி மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் சிவனுக்கு மிகவும் உகந்தது இந்த உகந்த நாளில் அவரை நினைத்து மனம் உருகி விரதம் இருந்து எந்த வரம் கேட்டாலும் கிடைக்கும். அந்த வகையில் சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் எந்த முறையில் விரதம் இருந்தால் அதற்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
வில்வம் என்றாலே சிவானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அதனை கொண்டு வீட்டின் பூஜை மற்றும் கோவிலில் அவருக்கு கொடுத்து வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும் அந்த வகையில் சிவராத்திரி தினமான இன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு பூஜை அறையில் வில்வ இலைகளை வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
தொடர்ந்து கவனம் ஏதும் சிதறாமல் சிவ மந்திரத்தை அரை மணி நேரத்திற்கு மேலாவது உச்சரிக்க வேண்டும். இந்த பூஜையை காலை நேரத்தில் 6:00 மணிக்கு செய்வது ஏற்றது ஏனென்றால் இந்த நேரத்தில் தான் சிவபெருமானுக்கு பிரம்மர் பூஜை செய்வார் அந்நேரத்தில் நமது வீட்டில் பூஜை செய்யும் போது கூடுதலாக பொங்கல் படைக்கலாம். இவ்வாறு பூஜை செய்ய வீட்டில் செல்வ கடாக்ஷம் உண்டாகும். இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள லிங்கம் அல்லது சிவபெருமான் சிலைக்கு 7.30 மணி அளவில் பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
இரண்டாவதாக 10 மணி அளவில் மகாவிஷ்ணு சிவபெருமானை பூஜீக்கும் நேரத்தில் பஞ்சாமிர்தம் கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்யலாம். அந்த நேரத்தில் நெய்வேத்தியமாக பொங்கல் கற்கண்டு போன்றவற்றை படைக்கலாம்.
மூன்றாவது கால பூஜை ஆக பார்வதி தேவி பூஜிக்கும் நேரமான 12.00 மணிக்கு தேனை கொண்டு அபிஷேகம் செய்து பூஜை செய்யலாம். அச்சமயத்தில் அவருக்கு நெய் வைத்தியமாக எள்ளு சாதம் படைப்பது கட்டாயம்.
இறுதிக்கால பூஜையில் தான் முக்கோடி தேவர்கள் எனத் தொடங்கி சாமானிய மக்கள் வரை அனைவரும் சிவன் முன் நின்று வழிபடக்கூடிய நேரம். அதிகாலை 4 மணி அளவில் கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேற்கொண்டு நெய்வேத்தியமாக வடித்த சாதத்தில் நெய் சேர்த்து வைக்கலாம். இந்த நான்கு கால பூஜையையும் கண் விழித்து முடிக்கும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் சிவபெருமான் கேட்ட வரம் தருவார் என்பது ஐதீகம்.