விருதுநகர்: தமிழ்நாட்டின் காஷ்மீர் என திடீரென வைரலாகி வரும் கூமாம்பட்டி ஒரு சிறிய கிராமம் அங்கு இருக்கும் அணையில் குளிப்பதற்கும் அல்லது மீன் பிடிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை நம்பி சுற்றுலாப் பயணிகள் ஏமாற வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன், எதிர்காலத்தில் கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையக் கூடியதாக எதிர்பார்க்கலாம் எனவும், கூமாம்பட்டி போன்ற சிறிய கிராம பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவது சிறந்தது. அழுத்தமான சூழ்நிலைகளில் இளைப்பாறுவதற்கு 100% பலன் பெறக்கூடிய இடங்களில் ஒன்று கூமாம்பட்டி கிராமம் என அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
விருதுநகர் கலெக்டர் மரு.என். ஓ.சுகபுத்ரா , தமிழ்நாடு முதலமைச்சரின் விருதுநகர் மாவட்டத்தின் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவுக்கல் பெரியாறு அணையில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெற போவதாக அறிவித்துள்ளார். மேலும், ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பூங்காவினை மேம்படுத்தும் பணி நடைபெறும் எனவும், அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கான சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசிடம் இருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறேன் என்றும், நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கூமாம்பட்டி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.