ஷெஃபாலி மாரடைப்பால் இறந்து விட்டார்களா? அல்லது கொலை முயற்சியா?

பிரபல பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இது பாலிவுட் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் பாலிவுட்டில் காண்டா லகா என்ற பாடல் மூலம் மிகவும் ஃபேமஸ் ஆகி இருந்தவர். ஒரு கட்டத்திற்கு மேல் பாலிவுட்டில் இவர் ஆட்சி புரிய முடியவில்லை. நார்மலான மார்க்கெட்டை மட்டுமே இடம் பிடித்திருந்தார். பின்னர் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் 3 சீசனில் ரீ என்ட்ரி கொடுத்து மிக பிரபலமாகி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் facebook மற்றும் இன்ஸ்டாகிராமில் நல்ல பிரபலமாகி ஃபாலோவர்ஸயும் வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீர் மாரடைப்பின் காரணமாக இவருடைய கணவர் மற்றும் நால்வர் இணைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து உயிரை மீட்க போராடியுள்ளனர் மருத்துவர் குழு. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இவருக்கு வயது வெறும் 42 என்பதால் நல்ல ஆக்டிவாக இருக்கும்போது எப்படி மரணம் ஏற்படும் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டினில் தடவியல் போலீசார் சேம்பல்ஸ் கலெக்ட் செய்துள்ளனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram