நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதிக்கு அடுத்து உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகரை சேர்ந்த சிவக்குமார் தன்னை சாமியார் அறிவித்துக் கொண்டு வந்துள்ளார். போலி சாமியார் சிவகுமார் தனது வீட்டில் சாமி சிலை ஒன்று வைத்து மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். அதே பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்ற விவசாயி சாமியாருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.
சம்பவத்திற்கு முன்தினம் சிவக்குமார் தனக்கு மதுபானம் வாங்கி வர சொல்லி பணம் கொடுத்து அனுப்பி உள்ளார். பின் மதுபானத்தை பெற்றுக்கொண்டு பேசிய சிவகுமார், உனக்கு மன சரி இல்லை என்று வெளியில் பேசிக்கொள்கிறார்கள் பரிகார ஒன்று செய்தால் சரியாகிவிடும் என்று நைசாக பேசி உள்ளார். போலி சாமியார் சொன்னதை நம்பி அப்பாவி நாகராஜ் பரிகார பூஜைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு நாகராஜை அழைத்துள்ளார். பரிகார பூஜை என்ற பெயரில் நாகராஜின் முகத்தின் மீது விபூதி மற்றும் குங்குமத்தை தூவி உள்ளார். பரிகாரத்தை போது திடீரென கத்தியை எடுத்து நாகராஜின் தலை மற்றும் நெற்றியில் குத்தியுள்ளார். இதை எதிர்பார்க்காத நாகராஜ் வலியை தாங்க முடியாமல் ரத்தம் சொட்ட வெளியில் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார்.
அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் நாகராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நாகராஜ் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். சிவகுமாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையின் பேரில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.