தென் கொரியா: தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்து நிலையில் ஒரு நபர் தீ வைத்துள்ளார். காலை வேலையில் சீயோன் மெட்ரோ ரயிலில் போன் என்ற 67 வயதுடைய நபர் ஏறியுள்ளார். பயணத்தின் போது திடீரென தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ரயிலில் ஊற்றி பற்ற வைத்துள்ளார். தீயானது ரயில் பெட்டி முழுவதும் பரவத் தொடங்கியது. பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்த நிலையில் பயந்துபோன சக ஊழியர்கள் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தனர்.
மெட்ரோ ரயிலின் உள்ளே இருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. மேலும், விசாரித்தபோது விவாகரத்தால் ஏற்பட்ட மனவேதனையால் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த உடன் மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டு 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டன.
புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிலர் அவதிப்பட்டனர். மேலும், காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் குற்றம் மற்றும் தனிப்பட்ட பயங்கரவாத நோக்கம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தியதில் விவாகரத்து ஏற்பட்டதில் கோபமாக இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும், சில வாரங்களுக்கு முன்பே பெட்ரோலை வாங்கி வைத்து விட்டதாகவும் போலீசாரிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்த பயங்கரவாத தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மேல் ரயில் பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் 2003 இல் ஓடும் மெட்ரோ ரயிலில் தீ விபத்து நடந்த போது 192 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.