விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு திரிஷா இயந்திர யானை ஒன்றை பரிசளித்துள்ளார். இது பார்ப்பதற்கு உண்மையான யானை போல் தோற்றமளிக்கிறது. மேலும் அது யானை என்ன என்ன செய்யுமோ அந்த விஷயங்களை எல்லாம் செய்யுமாறு புரோகிராமிங் செய்யப்பட்டுள்ளது. இதனை பொறுப்பேற்று வழிநடத்திய போலீசார் இருவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு இந்த இயந்திர யானை திறக்கும் விழா வெகு விமர்சையாக அங்கு நடைபெற்று உள்ளது. விலங்கு நலத்தின் மேல் ஆர்வம் உள்ளதால் இயந்திர யானையை பரிசளித்ததாகவும், இதனால் கோயில் திருவிழாவும் நல்ல முறையில் நடக்கும். அதே நேரத்தில் யானைகளும் காட்டில் சுதந்திரமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இயந்திர யானையை பின்னின்று பாகனாக ஒருவர் இயக்க அது ஒவ்வொன்று வேலையாக செய்கிறது. அது பார்ப்பதற்கு அதன் வேலை செய்வது எல்லாமே ஒரிஜினல் யானை போல் தோற்றமளிக்கிறது. இதனை பலரும் வரவேற்று வருகின்றனர். யானை காட்டில் சுதந்திரமாக உலாவ கூடியது. அதனை கோயிலின் உள்ளே அடக்கி வைத்திருப்பது மேலும் அதனால் அது பராமரிப்பு இன்றி இறப்பது போன்ற விஷயங்கள் இதன் மூலம் தடைப்படும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். திரிஷா ஏதேனும் அரசியலில் ஈடுபட்டு உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இது இப்பொழுது விருதுநகர் மாவட்ட பகுதிகளில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இதன் மூலம் யானைக்கு தீனி போடும் செலவு குறைக்கப்படும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.