தொழில்நுட்ப வளர்ச்சியில் சீன விஞ்ஞானிகள் உலகில் வியக்க வைத்து வருகின்றன. அந்த வகையில் கொசு அளவில் டிரோன்களை உருவாக்கியுள்ளனர். சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கொசு அளவிலான 0.6 சென்டிமீட்டர் உயரம் கொண்ட டிரோன்களை உருவாக்கியுள்ளனர். கொசு அளவில் இருப்பதால் இரவில் கண்களுக்கு புலப்படாது.
பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் இரண்டு இறக்கைகள், சிறிய உடல் பகுதி மற்றும் மூன்று கம்பிகள் கொண்ட கால்கள் மூன்று போன்ற தோற்றத்தில் இருக்கும். கண்காணிப்பு மற்றும் பயோ வார் போன்ற சூழல்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயோவா்களில் உளவு பார்ப்பதற்கு மிகச்சிறந்த ட்ரோன்களாக செயல்படும்.
கொசு அளவில் இருப்பதால் ட்ரோன்கள் மற்றும் ரேடார்களில் இருந்து தப்பித்து சென்று உளவு பார்க்கும் தன்மை கொண்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு போல அளவில் சிறியதாக இருந்தாலும் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் இந்த ட்ரோன் இயக்க முடியும். இதில் தகவல் தொடர்பு பவர் யூனிட்டுகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை வைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் பாஸ்வேர்டுகள் மற்றும் முக்கிய தரவுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். பேரிடர் கால மீட்பு பணி மருத்துவம் மற்றும் விவசாயி ஆகியவற்றிற்கும் பயன்படுத்தலாம். இது போன்ற ட்ரோன்கள் போர்களில் பயன்படுத்தப்பட்டால் எதிரி நாடுகள் சமாளிப்பது கடினமாக இருக்கும். சீனாவின் இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகளை வியக்க வைக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் சூழலில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன்களை பயன்படுத்தப்படும். கண்ணுக்கு புலப்படாது அளவில் இருப்பதால் எதிரி நாடுகளை தாக்குதலின் போது திணறடிக்க முடியும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.