சுத்த தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று சரிவை சந்தித்துள்ளது. இன்று மிதமான சரிவு என்றாலும் இதற்கு அடுத்து இதன் வளர்ச்சி எதை நோக்கி இருக்கும் என்று அச்சத்தை அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,726 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹9,742 ஆக இருந்தது. இது கிட்டத்தட்ட கிராமிற்கு 16 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 77,808 ஆக இன்று விற்கப்படுகிறது. இது பவுனுக்கு நேற்றைய விலையை விட 128 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 8915 ஆக இன்று விற்கப்படுகிறது.
இதன் நேற்றைய விலை ரூபாய் 8930 ஆக விற்கப்பட்டிருந்தது. தற்சமயம் கிராமிற்கு 15 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 71 ஆயிரத்து 320 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு 120 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளியும் கணிசமான சரிவை தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 117.70 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை விட கிராமிற்கு 10 பைசா குறைவாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு நூறு ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் கிராமம் ஒன்றுக்கு ரூபாய் 3746 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றே விலையை விட இன்று கிராமிற்கு 76 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது.