உக்ரையின் மீது மீண்டும் தாக்குதல்!! ஏவுகணை மழையை பொழிந்த ரஷ்யா!!

Attack on Ukraine again
மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்கரையனுக்கு இடையே நடந்து வரும் நேற்று தாக்குதல் உச்சம் அடைந்தது. இதுவரை இல்லாத வகையில் ரஷ்யா தனது பயங்கரவாத தாக்குதலை தீவிரப்படுத்தி ஏவுகணைகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட துரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எப் 16 விமானம் தாக்கி வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் விமானப்படை வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியதாவது, தாக்குதலில் உக்கரையின் மீது 477 டோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் கொண்டு தாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் இது மிகப்பெரிய வானொலி தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த ஏவுகணை தாக்குதலில் f 16 போர் விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது அதில் விமானி உயிரிழந்தார். மாக்சிம் உஸ்டிமென்கோ விமானி உயிரிழந்தார் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விமானப்படை செய்தி தொடர்பாளர் யூரி இக்னாட் அசோசியேட்டட் பிரஸ் செய்தி  நிறுவனத்திடம் பேசுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக கூறியிருந்தார். உக்கரை அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யா ஈரான் தயாரிப்பு ஷாஹித் ட்ரோன்கள் 477 டோன்கள் உக்கரையினை தாக்கியது.
பல்வேறு திசைகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கப்பட்டது. அலாரம் எச்சரிக்கையானது இரவு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த வாரத்தில் 1270 ட்ரோன்கள் 114 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டு இருந்தார். உலக நாடுகள் அமைதிக்காக புதினை அழைத்தாலும் புதின் போரை தொடர்ந்து நடத்தி வந்த கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். இஸ்தான்புலில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன் ரஷ்யா தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram