வாஷிங்டன்: whatsapp பயனர்களுக்கு வரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ்களை படிக்காமல் இருந்தால் மெட்டா ஏ ஐ சுருக்கமாக மாற்றி தரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் வாட்ஸ்அப் பயனர்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை 2014 ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் வாங்கியது.
உலக அளவில் 200 கோடிக்கும் மேற்பட்ட whatsapp பயனர்கள் இருக்கின்றன. Whatsapp பயனர்களுக்கு தேவைக்கேற்ப புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. Whatsapp பயனர்கள் தங்களுக்கு வந்து சேரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ் களை படிக்காமல் இருந்தால் மெட்டா ஏ ஐ சுருக்கமாக மாற்றித் தரும் சிறப்பு அம்சம் உடையது.
குறிப்பாக நீண்ட டெக்ஸ்ட் மெசேஜ்களை நெடுநேரம் ஸ்க்ரோல் செய்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீண்ட மெசேஜ்களை செய்தி குறிப்பு போல மாற்றி தர மெட்டா ஏ ஐ சுருக்கமாக மாற்றி தரும். Whatsapp பையனார்கள் நீண்ட மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும்படி கட்டளையிட்டால் மட்டும் நீண்ட மெசேஜ்களை செய்தி குறிப்பு போல மாற்றித் தரும். மெட்டா நிறுவனத்தின் சர்வர்கள் அல்லது வாட்சப் சிஸ்டத்தில் ஸ்டோர் ஆகாது வகையில் இந்த மெட்டா ஏ ஐ இருக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ ஐ மாடல்கள் மெசேஜ்களை ஸ்டோர் செய்யாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட் செட்டிங்ஸில் பயனர்கள் ஆன் செய்தால் மட்டுமே மெட்டா ஏ ஐ உபயோகப்படுத்த முடியும். அமெரிக்காவில் whatsapp பயனர்களுக்கு மெட்டா ஏ ஐ அறிமுகமாகியுள்ளது. தற்போதைக்கு ஆங்கில மொழியில் மெசேஜ்களை மட்டுமே சுருக்கி தரும். பின்வரும் நாட்களில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மெட்டா ஏ ஐ அறிமுகமாக உள்ளது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.