மீண்டும் மின் கட்டணம் உயர்வு ஏற்படும் என்று சமீபத்தில் தகவல் வெளியாகி வந்திருந்தது. மேலும் இதில் வீடுகளுக்கான இலவசம் மின்சாரம் 100 யூனிட் தடைப்படும். இனிமேல் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றவாறு செய்திகள் கசிந்திருந்தன. தொழிற்சாலைகளிலும் யூனிட்டுக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியானது கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும் தீயாக பரவி வந்து இருந்தது.
கடந்த ஜூலை மாதம் தான் மின் கட்டண உயர்வு ஏற்பட்டு இருந்தது. அதற்குள்ளேயும் மே மாதத்தில் கட்டண உயர்வா? என்று மக்கள் புலம்பி தவித்தனர். இந்த மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர். கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வு ஏற்பட்டதை அடுத்து, அடுத்தடுத்த வருடங்கள் ஜூலை மாதம் தொடர்ந்து மின்வாரியம் மறு பரிசீலனை செய்து மின் கட்டண உயர்வை அறிவித்து வந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதமும் மின் கட்டண உயர்வு ஏற்பட்ட நிலையில், அதற்குள் ஏப்ரல் மாதமும் மின் கட்டணம் உயர்வு ஏற்படும் என்று வெளிவந்த செய்தி வதந்தி என்று மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார். மேலும் தற்சமயமும் வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், வீடுகள் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் தற்சமயம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், தொழிற்சாலைகளின் மின்கட்டணத்திற்கு மட்டுமே யூனிட்டிற்கு 15 பைசா முதல் 37 பைசா வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளைப் போலவே தொழிற்சாலைகளிலும் அரசு மின்மாற்றம் செய்யக்கூடாது என்று தொழிற்சாலைகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் இது குறித்து உறுதிபட தகவல் மின்வாரியத்தால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.