ரஷ்யாவுக்கு எதிராக களம் இறங்கும் அமெரிக்கா!! உசுப்பி வருகிறதா உக்ரைன்? 

America takes the field against Russia
கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையிலான தாக்குதல் நேற்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதல் கொண்டு முடிந்தது. F 16 போர் விமானம் ஆனது ரஷ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையை சமாளிக்க அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது உக்ரைன். இதற்கு முன்னர் நடந்த ஈரான் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஆதரவாக களம் இறங்கியது.
உக்ரைன் ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்கரையனுக்கு ஆதரவாக களம் இறங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்யா ஒரே இரவில் உக்கரையின் மீது தாக்குதல் நடத்தியதில் ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தடுக்க முயன்ற போது எப் 16 விமானி உயிரிழந்தார்.
விமானத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து தூரமாக எடுத்துச் செல்ல முயன்ற போது விமானத்தில் இருந்து வெளியேறப் போதுமான அவகாசம் கிடைக்காததால் அவர் உயிரிழந்து விட்டார். தாக்குதலின் போது வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. 12 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகரம் கீவில் சத்தம் மற்றும் ஏவுகணைகளின் எச்சரிக்கை ஒலி போன்றவற்றால் மக்கள் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். இதுவரை லிவ்வ் பகுதியில் பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் தற்போது தீவிரமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram