2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் பணிகள் அந்தந்த கட்சிகளின் சார்பில் வெகு தீவிரமாக நடந்து வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக இணைந்துள்ள பாஜக, தவெக நாதக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். அந்தந்த கட்சிகள் சார்பில் களப்பணிகள் மற்றும் பொது குழு கூட்டங்கள் ஆகியவை கட்சி கூட்டத்தின் மூலம் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதிய கட்சியான தவெக நல்ல முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், நடப்பாச்சி திமுக அதன் யுக்திகளை மாத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே அவ்வபோது சலசலப்பு ஏற்பட்டு வந்திருந்தது.
இந்நிலையில் பாஜக இணைந்துள்ள அதிமுக கட்சியில் அதிமுக சார்பில் முதல்வர் வருவார் என்றும் அவரின் கீழ் பாஜக உறுப்பினர்கள் சிலர் இணைந்து போட்டியிடுகின்றனர் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டிருந்தார். அனைத்து கட்சி சார்பிலும் திமுகவிற்கு அதிக பிரஷர் வருவதனால் திமுக அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு முப்பது சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை கொண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே கட்டளை பிறப்பித்து இருந்தார். அதன் தொடர்பாக ஆராய்ந்ததில் அதில் தளர்வு காணப்படுகிறது என்று அறிந்த அவர், 30 சதவீதம் கட்சி புதிய உறுப்பினர்களை இணைக்க முடியாவிட்டால், மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகி விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்று வேலையை தீவிர படுத்த கட்டளை இட்டுள்ளார் முதல்வர். இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.





