சுபான்ஷுவை விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியதற்கு காரணம் இதுதானா!!

சுபான்ஷு சுக்லா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பி வைத்ததற்கு காரணம் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தான். இந்தியாவில் இதுவரை விண்கலன்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதை தவிர, விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் இந்தியாவின் சார்பில் அதாவது இந்தியா தன்னிச்சையாக இதுவரை அனுப்பப்படவில்லை. இதற்கான விண்வெளி ஆராய்ச்சி மையம் ககன்யான் என்று இந்தியாவில் நிறுவப்பட உள்ளது. விண்கலன்களை ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு அனுப்பப்படுவது எளிது. ஆனால் ஒரு மனிதரை விண்கலன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு சென்று மீண்டும் அவரை உலகிற்கு கொண்டு வருவது மிக கடினம். இதற்காக அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் என்கிற இந்திய நிறுவனம் ஆனது தொடர்ந்து நுணுக்க வேலைகளை கவனித்து செயல்படுத்த தொடங்கி இருந்தது.

இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் 1984 ஆம் ஆண்டு ராகேஷ் ஷர்மா என்கிறவர் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்சமயம் விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர் ஜூன் 26 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு விண்வெளி பயணத்தை தொடங்கி இருந்தார். இவரை முக்கியமாக இப்பயணத்திற்கு தேர்வு செய்ததற்கு காரணம் ககன்யான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வளர்ச்சிக்காக தான். அடுத்த பத்து வருடங்களுக்குள் இந்தியாவின் ககன்யான் திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு அதன் தேவைகள் தொடங்கப்படும் என்ற முன்னோக்கு அடிப்படையில் தான் இவர் தற்சமயம் விண்வெளி பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இவர் 14 நாட்கள் தங்கி அங்கு பணியாற்ற போவதால் இவருக்கு அனுபவ அறிவும் இருக்கும். இவரின் மூலம் விண்வெளி வீரர்களை வழி நடத்த முடியும் என்ற கணிப்பில் தான் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram