பணம் பட்டுவாடா செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!! பேனரோடு வைத்து சுற்றி வளைத்த பொதுமக்கள்!!

கள்ளக்குறிச்சி அடுத்து சின்ன சேலம் பகுதியில் நேற்று திமுக நான்காண்டு சாதனை குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. முகாமில் மக்களை கலந்து கொள்ள செய்வதற்காக, முன்னரே பணம் தருவதாக கூறி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் திமுகவின் நான்காண்டு சாதனை குறித்து கூட்டம் நடந்து முடிந்த பிறகு பணம் பட்டுவாடா பெறுவதற்காக முந்தியடித்து சென்றுள்ளனர். திமுக சார்பில் தொடர்ந்து களப்பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி தற்சமயம் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் வேலு பணம் பட்டுவாடா செய்துள்ளார். அவர் ஒவ்வொருவராக வரிசையில் வரச் சொல்லி முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு பணத்தை கொடுத்து வந்துள்ளார். பொதுமக்கள் ஆர்வம் தாளாது சிறிது நேரத்தில் அவரை பேனர் ஒரு பேனராக வைத்து சுற்றி வளைத்து பணத்தை பெற்று சென்று உள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் பணம் பட்டுவாடா செய்ய முடியாமல், தன்னை விட்டால் போதும் என்று தப்பித்து நகர்ந்து உள்ளார். இதனால் அங்கு திரண்ட மூதாட்டிகள் திமுக நிர்வாகிகளை பார்த்து, பணம் தரவில்லை என்றால் ஓட்டு போட முடியாது என்று வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் பணம் பட்டுவாடா பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அங்கு வந்த மூதாட்டி மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை நோக்கி பணம் தரவில்லை என்றால் ஓட்டு போட முடியாது என்றவாறு கூச்சலிட்டு சென்று உள்ளனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram