ஊழியருக்கு பாடம் கற்பித்த விவசாயி!! லஞ்சம் கேட்டதால் கம்பி எண்ணும் விஏஓ!!

The farmer taught the employee a lesson!!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரீதா என்பவர். கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விவசாயி விண்ணப்பித்தார். இந்நிலையில் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சத்தை ஜிபி யில் அனுப்பிய விவசாயி ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தாசில்தார், விஏஓ, சர்வேயர் மற்றும் அரசின் வருவாய் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் லஞ்சம் புகார் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுப்பார் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் விவசாயி புகார் அளித்துள்ளார். கேரளாவில் ஆலப்புழாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி பழைய சர்வே எண் கேட்டு விண்ணப்பித்த மனுவுக்காக கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதை  சாமர்த்தியமாக பதிவு செய்து புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன் விசாரணையில் விஏஓ ப்ரீத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு கிராம நிர்வாகியாக பிரித்தா பணிபுரிந்து வருகிறார். பழைய எண் சர்வே வழங்க வேண்டும் எனில் 1000 ரூபாயை  g pay -யில் அனுப்ப நிர்வாக அதிகாரி போனில் கூறி இருக்கிறார்.
பெண் அதிகாரியின் ஆடியோ ஜி பெயில் பணம் செலுத்தி ஆதாரத்துடன் ஆலப்புழா லஞ்ச ஒழிப்பு போலீஸ் விவசாயி புகார் அளித்ததை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக பிரீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram