சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவர் சூளுரை எடுத்துள்ளார். தேர்தல் களத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக பாஜக கூட்டணியால் முதல்வருக்கு பயம் வந்துவிட்டது எனவும் பழனிசாமி பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலமாக முதலமைச்சர் பதற்றமடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவைத்துடன் முடிந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் போல. அதிமுக வெற்றிக்கு இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களை முதலில் பாருங்கள். ஒவ்வொருவரும் அதிமுக வேட்பாளருக்கு 25 வாக்குகளை பெற்றுக் கொடுத்தாலே நமது கூட்டணி பலமானதாக அமையும் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தொண்டர்களிடையே உற்சாகமாக உரையாற்றினார் எடப்பாடி.
மேலும், பேசியவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருப்பதாகவும் கூறினார். பொன்விழா கண்ட கட்சி என்பதால் பயம் வந்துவிட்டது முதல்வருக்கு. முதல்வருக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பொறுக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் நோக்கமானது வேட்பாளருக்கு வாக்குகள் சிதறாமல் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
திமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக பொன்விழா கண்ட கட்சி என ஆவேசமாக பேசினார். பத்து தோல்வி பழனிச்சாமியை எந்த கொம்பனாலும் அதிமுக கபளீகரம் செய்ய முடியாது என்றும், தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அதனால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும், ஸ்டாலினுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்தது பொறுக்கவில்லை பதற்றத்தில் உள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.