தமிழகத்தில் மின்கட்டண உயர்வு!!மின்சாரத் துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று ஜூலை 1ம் தேதி முதல், மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிய தொழில்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் 3.16% வரை உயர்வு செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த உயர்வு 3.16%-ஐ மீறாமல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, இந்த கட்டண உயர்வு பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வீட்டு மின்சாரம் பயன்படுத்துவோர் மற்றும் சிறு வணிகம் செய்வோர்கள் மீது எந்தவிதமான கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. வீடுகளுக்கான மின் கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டிருந்தாலும், அதன் பாதிப்பை பொதுமக்கள் அனுபவிக்க வேண்டியதில்லை எனவும், அரசே அந்தச் செலவுகளை ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கும் இதே நிவாரணம் வழங்கப்படும்.

 

இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது நேரடி சுமை விழாமல் பாதுகாக்கிறது. அரசு தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணங்களை மீளாய்வு செய்து, பொருளாதாரச் சுமையை சமப்படுத்தும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெரிய தொழில்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் 3.16% வரை உயர்வு என்ற புதிய கட்டணங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram