தங்கத்தின் விலை சராசரியாக 5 நாட்களுக்கு சரிவை சந்தித்து இருந்தது. இந்நிலையில் இன்று மாத தொடக்க முதல் நாளிலேயே தங்கம் விலை சரமாரியாக ஏறத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9840 ஆக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹9,726 ஆக இருந்தது. நேற்றைய விலையை விட கிராமிற்கு 114 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 78,720 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையோட பவுனுக்கு ரூபாய் 912 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9020 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 105 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது.
இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 72,160 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை விட ₹.840 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 120 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 2. 30 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு நேற்றைய விலையை விட 2300 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வழக்கம்போல் பிளாட்டினம் விலை நேர்மாறாக குறைந்துள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ரூபாய் 3712 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விளையாட கிராமிற்கு 34 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது.





