இஸ்ரேல் ஈரான் இடையான போரில், ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி உலையை இஸ்ரேலால் தொட முடியவில்லை. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பி-2 பம்பர்ஸ் போர் விமானத்தின் மூலமாக GBU 57 என்ற பங்கர் பஸ்டர் குண்டுகளை ஈரானின் அணுசக்தி உலை மீது தாக்கி தவிடு பொடி ஆக்கி இருந்தது. இதனால் அங்கு சேதம் பலத்தமாக இருந்தது. அந்த அணுசக்தி மையம் தனது பாதுகாப்பு வளையத்தை தரையில் இருந்து 30 அடி முதல் 260 அடி வரை ஆழப்படுத்தி செயல்பட்டு வந்திருந்தது. அதனை இந்த GBU 57 குண்டுகள் பதம் பார்த்த நிலையில் இது உலக நாடுகளின் பெரும் பேசும் பொருளாகவும், அமெரிக்க நாட்டின் ஆயுத வல்லமை குறித்தும் கவனிக்கப்பட்டு வந்திருந்தது.
இந்நிலையில் இந்தியா அமெரிக்க நாட்டையே மிரளவிடும் அளவிற்கு பங்கர் பஸ்டர் ஏவுகணையை உருவாக்கும் யுக்தியில் ஈடுபட்டு உள்ளது. அமெரிக்கா வைத்துள்ளது பங்கர் பஸ்டர் குண்டுகள் மட்டுமே. ஆனால் நம்மிடம் உருவாக்கப்பட உள்ளது பங்கர் பஸ்டர் ஏவுகணைகள். குண்டுகளினாலே அணுசக்தி உலையை தவிடு பொடி ஆக்க முடியும் என்றால் ஏவுகணையின் விளைவு என்னவாக இருக்கும் என்று சிந்திக்க வேண்டும். இந்தப் பங்கர் பாஸ்டர் குண்டுகளை பிற போர் விமானங்கள் மூலம் தான் இலக்கிற்கு எடுத்துச் செல்ல முடியும். ஆனால் இந்தியா தயாரிக்கும் இந்த பங்கர் பஸ்டர் ஏவுகணைளை இருக்கும் இடத்திலிருந்து ஏவி விட முடியும். மேலும் இதன் வெடிபொருளின் அளவும் குண்டுகளை விட இரண்டரை மடங்கு கூடுதலாக இதில் அடக்கப்படும் திட்டத்தை தீட்டி உள்ளது இந்தியா. இந்நிலையில் சர்வ உலக நாடுகளில் மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இந்தியா உருவாக்க உள்ளது என்று பிற நாடுகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.