திருப்புவனம் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொலை தொடர்பாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேரும் காவல் நிலையத்தில் சிறையில் உள்ள நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அஜித் குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கு விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். திமுக ஆட்சியில் காவல்துறை மனிதாபிமானம் என்று செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் விஜய். குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பின் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 2026 தேர்தலில் திமுக தோல்வி அடையும் என எச்சரித்துள்ளார் விஜய். அஜித் குமார் மரணம் குறித்து தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் காவல்துறையினர் மோசமான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அவர் கூறியுள்ளார். முதலில் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது என்று குற்றம் சாட்டினார். மேலும், அரசியல் கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல் மரணங்கள் மட்டுமே 24 ஆக உள்ளது இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விஜய் அறிவித்துள்ளார்.