2025 ஆம் ஆண்டுக்கான அரை ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் ஜூலை 1 இன்று முதல் ரயில்வே டிக்கெட் விலை அதிகரிப்பு, கிரெடிட் கார்டில் முக்கிய சேவைகள் கட், கார்டு பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு, வருமான வரி தாக்கல் செய்யும் வழிமுறை மாற்றம், பான் கார்டு வேண்டும் என்றால் ஆதார் அப்டேஷன் ஆகியவை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐ சி ஐ சி ஐ வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டில் மாதத்தில் முதல் ஐந்து பரிவர்த்தனைக்கு மட்டுமே கட்டணம் கிடையாது. அதற்குப் பின்னர் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியிட்டுள்ளது. அதிலும் மற்ற ஏடிஎம்களில் ஐசிஐசிஐ கார்டை உபயோகிக்க வேண்டும் என்றால் முதல் மூன்று பரிவர்த்தனைக்கு மெட்ரோ சிட்டிக்கு இலவசம். பிற நகரங்களுக்கு 5 பரிவர்த்தனைக்கு இலவசம். அதற்கு மேல் உபயோகித்தால் ஒவ்வொரு டிரான்ஸ்லேஷன்க்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஐசிஐசிஐ பேங்க்.
அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ பேங்க் தனது வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விமான விபத்துக்குரிய இன்சூரன்ஸ் ஐ தற்சமயம் கேன்சல் செய்து உள்ளது. சமீபத்தில் நடந்த விமான விபத்து மேலும் அதற்கான இழப்பீடு தொகை கணக்கீடு குறித்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், 46 நாட்கள் 7 அதிகரித்து தற்சமயம் செப்டம்பர் 15 கடைசி தேதி என்று வருமான வரித்துறை விலக்கு அளித்துள்ளது. விரைவு ரயிலின் 500 கிலோ மீட்டருக்கு மேலான பயணத்திற்கு கணிசமான உயர்வை அறிவித்துள்ளது ரயில்வே துறை. இனிமேல் பான் கார்டு வேண்டும் என்றால் அதற்கு அப்ளை செய்பவர்கள் அவர்களின் ஆதார் கார்டை ஆப்டேஷன் ஆக வைத்திருக்க வேண்டும். மேலும் ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருகின்ற டிசம்பர் 31 கொள்ளு தனது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும் ஆதார விபரங்கள் முறையாக உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.