தெலுங்கானா மாநிலத்தில் சங்காரெட்டி மாவட்டத்தில் பஷாமிலராம் பகுதியில் சிகாச்சி கெமிக்கல் ஃபேக்டரி இயங்கி வந்திருந்தது. நேற்று முதல் ஷிப்டில் வேலை பார்க்க 140 பேர் ஆலைக்குள் பணிபுரிந்துள்ளனர். தொழிற்சாலையின் துணைத் தலைவர் எல் என் கோவன் ஆலைக்குள் நுழையும் போது பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறி உள்ளது. கோவனுடன் இணைந்து பாய்லர் அருகில் பணிபுரிந்த 10 பேர் தூக்கி எறியப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்ததின் காரணமாக மூன்று மாடி கட்டிடம் ஒன்றும் இடிந்து விழுந்து உள்ளது. இந்நிலையில் அங்கு விரைந்த மீட்பு குழு தொடர்ந்து போராடி தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.
இரவு மழை பெய்ததன் காரணமாக வேலை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும் வெகு தீவிரமாக மீட்பு குழு போராடி வருகின்றது. இதுவரை 37 பேர் உடல் கருகிய நிலையில் இறந்துள்ளனர். பாதி பேரை போராடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 57 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஏழு பேரின் உடல் நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது. மீதம் உள்ளவர்களை மீட்பு குழு போராடி தேடி வருகிறது. மேலும் உடல் கருகிய நிலையில் கிடைக்கப்படுவதால் அவரவர் சொந்தக்காரர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் உடலின் மாதிரிகள் ஒப்பிட்டு அவரவர் குடும்பத்துக்கு உடல் ஒப்படைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பிற மாநில ஊழியர்கள் வேலை பார்த்து இருந்ததால் அந்த மாவட்ட கலெக்டர் இதற்கென்று தனியாக ஒரு ஹெல்ப்லைன் நம்பரை அறிவித்துள்ளார். 08455276155 என்கின்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொண்டு உரிய தகவல் பெறுமாறு கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிற மாநில ஊழியர்களின் உடலை எப்படி உரியவர்களிடம் சேர்ப்பது என்பது குறித்தும் குழு டிஸ்கஸ் செய்து வருகிறது.