அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநகரத்தில் இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில் அவர் பஹல்காம் தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானின் உறவு குறித்தும் குறிப்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள காஷ்மீரின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று பஹல்காம். அதனை முற்றுகையிட்ட தீவிரவாதிகள், தனி மனிதனின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்து மீறி தாக்குதல் நடத்துவதே தவறு. அதிலும் மதவெறியை தூண்டும் செயலை அவர்கள் செய்துள்ளனர்.
இனிமேல் இந்தியா இது போன்ற பயங்கரவாதத்தை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு பதில் தாக்குதல் நடத்துவது தவிர எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித உறவும் கிடையாது. இன்னும் தேவைப்பட்டாலும் நாங்கள் களம்ர இறங்குவோம். பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் உதவியாளர்களையும் நாங்கள் சும்மா விட மாட்டோம். இனிமேல் இந்தியா எதையும் பார்த்துக்கொண்டு சகித்துக் கொண்டு செல்லாது. பயங்கரவாதிகள் தேவையில்லாமல் இந்தியாவை தீண்டாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது என்றவாறு அவர் பாகிஸ்தான் பயங்கிர வாதிகளை எச்சரித்துள்ளார். மேலும் சிந்தூர் தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடியாக அமைந்திருந்தது. அதையும் தாண்டி சீண்டினார்கள் என்றால் இந்தியா எல்லா கட்ட தாக்குதல்களுக்கும் இரட்டிப்பாக பதில் அளிக்காமல் விடாது. மேலும் பயங்கரவாதிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யும் மறைமுக நாட்டையும் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இந்தியாவின் அமைதியை கிளைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் இந்திய அரசாங்கம் பொறுத்துக் கொண்டு இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





