5 நாடுகள் 8 நாட்கள் வெளிநாட்டு பயணம்!! இன்று தொடங்கினார் மோடி!! 

5 countries 8 days foreign trip
புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் முதல் முறையாக 8 நாட்கள், 5 நாடுகள் வெளிநாட்டு பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று (2/7/2025)  முதல் ஒன்பதாம் தேதி வரை 8 நாள், 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் எட்டு நாட்களுக்கு வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட வகையில் நீண்ட பயணமாக இந்த பயணம் அமைகிறது.
இரண்டு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, நமீபியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் மோடி. பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு கலந்து கொள்ள செல்கிறார்.
தெற்கு பகுதியில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் நட்புறவை விரிவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார். இதற்கு முன் 2016 இல் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான், கத்தார் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கானாவில் இன்று மற்றும் நாளை பயணம் மேற்கொள்வார். 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் மோடியின் முதல் பயணம் இதுவாகும். டிரினிடாட் அண்ட் டுபாகோ ஆகிய நாடுகளில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாட்கள் பிரேசில்  பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா அழைப்பின் பேரில் பிரதமர் 17 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இறுதியாக பிரேசில் இருந்து நமீபியாவிற்கு பயணம் மேற்கொள்வார். நமீபியாவில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டு நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து நரேந்திர மோடி ஜூலை ஒன்பதாம் தேதி அன்று நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram