சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கார்த்திக்கின் ரசிகர் ஒருவர் உழவன் பவுண்டேஷன் குறித்து நீங்கள் இந்த கூட்டத்தில் எடுத்து உரையுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அவரும் சிறிதும் ஒரு ஆணவம் இன்றி உழவன் பவுண்டேஷன் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. ஒரு ஆறு ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. உழவன் பவுண்டேஷன் மூலமாக நல்ல முறையில் பயிரிடும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வை வளப்படுத்த உதவி புரிந்து வருகிறது.
விவசாயி என்றால் பெண் தர மாட்டோம் என்று சொல்கிற காலம் போய் விவசாயியா என்ற பெருமை அந்த தொழிலுக்கு வர வேண்டும். விவசாயி அவர்களது மகன்களை இந்த தொழிலுக்குள் வர வேண்டாம் என்கின்ற காலம் மாறியாக வேண்டும். விவசாயம் தான் நாட்டிற்கு முதுகெலும்பு. அதில் வளர்ச்சி வேண்டும் என்ற முன்னோக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருந்தது. விவசாயிகள் போர் வீரர்களுக்கு சமமானவர்கள். எதிர்காலங்களில் உணவு தண்ணீர் ஆகியவற்றிற்கு மிகுந்த பிரச்சினை ஏற்படும். அதை நினைவில் கொண்டு செயல்படுபடுபவர்கள் விவசாயிகளே. இது விவசாயம் மட்டுமல்ல கால்நடை மருத்துவம். ஏன் இன்னமும் சொல்லப்போனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து போன அனுமன் நதியை திரும்ப மீட்டுக் கொண்டு வருகிற தன்னார்வலர்களோடு இணைந்து உழவன் பவுண்டேஷன் கிட்டத்தட்ட ஒரு 13 கிலோமீட்டர் வாய்க்காலை தூர்வாரி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அவ்வளவு பெரிய மனுஷன் விவசாயத்தை எதிர்கால தேவை புரிந்து மிக அமைதியாக ஒரு மிகப்பெரிய பவுண்டேஷனை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியமிகுந்த ஒன்றுதான். சின்ன விஷயம் செய்தாலும் அதை வெளியுலகிற்கு சொல்லி செய்யும் சூழலுக்கு மத்தியில் இவரது இந்த உழைப்பு ஜெயிக்க அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.