பருத்திவீரன் படத்தில் சித்தப்பா கேரக்டரில் மிக நேர்த்தியாக நடித்திருப்பவர் தான் நடிகர் சரவணன். இவர் சமீபத்தில் தோற்றம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படக் குழுவுடன் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. அதில் சமீபமாக சமூகத்தில் நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்க, நடிகர் சரவணன் மிக உண்மையாக அவரது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
முதலில் சமீபமாக போதைப் பொருட்கள் விஷயமாக பல நடிகர்கள் செய்யப்பட்டுள்ளரே என்று கேட்க, பாவம்ங்க ஏதாவது சூழ்நிலை காரணமாக அப்படி செய்திருப்பார்கள். அதற்கு என்ன செய்ய முடியும். இறைவன் எழுத்தில் அவர்கள் அப்படி செய்யனும் என்று எழுதி இருக்கு என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அஜித்குமார் கொலை வழக்கு குறித்து கேள்வி கேட்கையில், அவரை அடித்து கொடூரமாக தாக்கியது போலீஸ் தான். குற்றம் இழைத்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். அதற்காக ஆளுங்கட்சி தான் காரணம் என்று கூறுவது. எந்த விதத்தில் நியாயம்? வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகளும், அவர்கள் மீது பழி போட வேண்டும் என்ற காரணத்தில் உள்ளவர்களும் இதனை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய அப்பா போலீஸ். அவர்களை அப்படி அடித்து கேட்டால் தான் அவர்களிடம் இருந்து உண்மையை வாங்க முடியும். இப்போ உள்ளவர்கள் எல்லாம் ஹேர் ஸ்டைல் கூட பார்க்கவே அவர்களை விகாரமாக தோற்றமளிக்கின்றது.
அதனை மாற்ற சொல்ல முயன்றால் கூட அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. அதற்காக அவர்கள் அதிகபட்சமாக கத்திக்குத்தில் கூட ஈடுபடுகிறார்கள் என்று புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலை வன்மையாக கண்டித்துள்ளார். பிரபல நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பகையில், தம்பி விஜய் ஜெயிக்கணும். அவர் எல்லா விஷயத்தையும் கரெக்டாக செய்து வருகிறார். அவர் அரசியலில் தலைவராக வேண்டும் என்று அவரது கருத்தினை மிக வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.