மாலி: மாடியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியில் பணி புரிந்த மூன்று இந்தியர்களை அல்குவைதா ஆதரவு பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். மூன்று இந்தியர்களை பத்திரமாக மிக்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலியில் உள்ள தொழிற்சாலையில் இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கெய்ஸில் டைமண்ட் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில் இந்தியர்கள் பல பேர் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ஆயுதங்களுடன் தொழிற்சாலைகள் நுழைந்த பயங்கரவாதிகள் 3 இந்தியர்களை கடத்தியுள்ளனர். தொழிற்சாலையில் திடீரென நுழைந்த உடன் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. பின் பணய கைதிகளாக 3 இந்தியர்களை பிடித்து சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பயங்கரவாதிகள் 3 இந்தியர்களை கடத்தியது தெரிய வந்தது. ஜமாத் நுஸ்ரத் அல் இஸ்லாம் வால் முஸ்லிம் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 1ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் ஆயுதங்கள் இந்திய கும்பல் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து இந்தியர்களை பணய கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா பெறும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாலிய அரசுடன் தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டது. மேலும், சிமெண்ட் தொழிற்சாலையுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.