பொதுவாகவே மக்கள் மத்தியில் சித்த மருந்து எடுத்துக் கொள்வதற்கு சில பயங்கள் இருக்கும். அது உட்கொள்வதன் மூலம் நாம் ஆங்கில மருத்துவத்தை அணுக முடியாது என்ற தவறான எண்ணம் இருக்கும். மேலும் இதனால் உடல் உபாதைகள் வரும் என்ற அச்சம் இருக்கும். இது குறித்து மருத்துவர் ஒருவர் தனியார் youtube சேனலுக்கு டிப்ஸ் உடன் கூடிய அறிவுரையை வழங்கி உள்ளார். பொதுவாக சுகர் லெவல் 300 தாண்டியிருந்தால் இவ்வாறு செய்வதன் மூலம் அதனை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய டிப்ஸ் பின்வருமாறு, பொதுவாக மக்கள் மத்தியில் சித்தா மருந்து கொடுத்து தவறான விஷயம் பதிந்துள்ளது. ஆங்கில மருந்தை விடுத்து சித்த மருந்து எடுத்துக் கொள்வதால் சக்கரை அளவு இன்னும் கூடி விட்டால் என்ன செய்வது என்று நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஆங்கில மருந்தோடு நாங்கள் கூறும் செயல்முறையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுவரை டெஸ்ட் செய்ய வேண்டும்.
சுகர் நார்மலான பிறகு சித்த மருந்தை கன்டினியூ செய்து சுகரை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடுத்துரைத்துள்ளார். மேலும் சுகர் என்றாலே பாகற்காய் ஜூஸ் போட்டு குடியுங்கள் என்று குடித்து விடக்கூடாது. பாற்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் அல்சர் செரிமான பிரச்சனை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படும்.
பாகற்காயை சமைத்து உண்பதே சாலச் சிறந்தது. அருமருந்து யாதெனில் 200 கி வேப்பம்பூவை நெய்யில் வதக்கி, 100 கிராம் தனியாவை பின்னர் வதக்கி, தலா இருபது கிராம் சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றையும் வதக்கி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை மற்றும் இரவு இரு வேலைகளில் இந்த பொடி அரை டீஸ்பூன் எடுத்து சாப்பாட்டிற்கு கால் மணி நேரம் முன்பு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடிக்க வேண்டும். 300க்கு மேல் இருந்தால் இரு வேலை குடிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். இது உடம்பில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றவும் மிகவும் பயன்படும். எனினும் மருத்துவ ஆலோசனையின் கீழ் இதை எத்தனை முறை சாப்பிடலாம் என்று கேட்டுக் கொள்வது நல்லது.