சேலம்: சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணை மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக கனமழையால் நூறு அடிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு உறுதியான நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கிளை ஆறுகள் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில் கல்லணையை சென்ற பின் கல்லணையை மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். கிளை ஆறுகள் கால்வாய்கள் நோக்கி காவிரி நீர் சென்றதை தொடர்ந்து டெல்டா குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் டெல்டா பகுதிகளில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு காவிரியின் கடைமடை பகுதிகளுக்கு சென்று அடையும். ஆனால் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளும் நடைபெறவில்லை விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் நடத்தி மட்டும் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்.
காவிரி படுகை முழுக்க தடை இன்றி பயணம் செய்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லும் நிலை உள்ளதா என சிந்தித்துப் பார்க்காமல் செயல்பட்டது விவசாயிகளை பாதிப்புக்குள்ளாகி உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். அணை திறந்து 20 நாட்கள் ஆகிவிட்டது சுட்டிக்காட்டிய அவர், கடைமடை பகுதிகளுக்கு சென்றடையாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி, கோட்டூர், நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, தஞ்சையின் பேராவூரணி, மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு காவிரி நீர் சென்றடையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலையில் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையாதது ஏன்?
காவிரி தண்ணீரைக் கொண்டு சேர்ப்பதில் அரசுக்கு சிக்கல் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், டெல்டா பகுதிகளுக்கு உடனடியாக தடையில்லாமல் காவிரி நீர் சென்றடைய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.