கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலை அடுத்து அமர்நாத் யாத்திரை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வெகு கோலாகலமாக நேற்று பல அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை 38 நாட்களாக பயணம் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயர உள்ள பனி லிங்க தரிசனத்திற்காக இந்த யாத்திரை ஆண்டு தோறும் நடந்து வருகிறது.
அனந்த்நாக் என்கின்ற மாவட்டத்தில் பஹல்காம் வழித்தடத்திலும், காண்டர்பால் மாவட்டத்தில் பால்டால் வழித்தடத்திலும் இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயணம் நேற்று தொடங்கி மத்திய அமைச்சர் சோபா உள்பட 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இரு வழித்தடத்திலும் புறப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் இவர்களை வாழ்த்தி வழி அனுப்பி உள்ளார். இந்த பயணத்திற்காக ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு, பல அடுக்கு பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் ராணுவ அதிகாரிகள் ரோந்து ஆகிய ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஹர ஹர மஹாதேவா என்ற கோஷத்தோடு மிகுந்த ஆர்வத்தோடு பயணத்தை தொடங்கி உள்ளனர். கடந்த பஹல்காம் தாக்குதல் நடந்த போது குறிப்பிட்ட மதவெறி வெளிப்பட்டு இருந்தது. அதையும் தாண்டி மக்கள் தற்போது இவ்வாறு யாத்திரை தொடங்கி இருப்பது அவர்களின் கடவுள் ஈடுபாட்டை குறிக்கிறது. அவரவர்கள் நம்பிக்கையை பிறர் கெடுப்பது இந்தியாவில் சாத்தியப்படாது என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.