அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது!! ராமதாஸ் திட்டவட்டம்!!

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எம்எல்ஏ அருள் நீக்கம் குறித்து பதில் அளித்துள்ளார். எம்எல்ஏ அருளை நீக்குவதற்கு அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. எம்எல்ஏ அருள் எனக்கு சாதகமாக வேலை செய்வதனால் அன்புமணி அவரை கட்சியை விட்டு நீக்கி உள்ளார். அவரை நீக்க வேண்டுமென்றால், சட்டசபை குழு தலைவர் ஜி கே மணி வாயிலாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான் அருளை நீக்க முடியும். அதற்கு நிறுவனராக என்னுடைய ஒப்புதல் வேண்டும்.

அது ஒருபோதும் நடக்காது. அருள் நிர்வாக உறுப்பினர், பொதுச் செயலாளர் மற்றும் எம்எல்ஏ ஆகிய பொறுப்புகளில் உள்ளார். அந்தப் பொறுப்புகளில் இனியும் அவர் தொடருவார். என்னுடைய வழிநடத்தலின் அடிப்படையில் கட்சி செயல்படும். மேலும் திமுக அதிமுக கூட்டணி குறித்து எழும் செய்திகள் எல்லாம் வதந்தி. வருகின்ற ஜூலை 10ஆம் தேதி பாமக மகளிர் கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக நான் பூம்புகார் செல்ல இருக்கிறேன். அதன் பின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று தான் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் கட்சி உறுப்பினர்கள் இவ்விருவர்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு திணறுகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக இதன் மூலம் தெரிகின்றது. மேலும் அந்த சந்திப்பில் செய்தியாளர்கள் அன்புமணி குறித்து கேள்வி எழுப்பிய நிலையிலும் அதை ராமதாஸ் பதிலளிக்காமல் தவிர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram